Thursday, May 7, 2020

மனித வாழ்வை சீறழிக்கும் மதுகடையை இழுத்து மூடு

தமிழக அரசே.
நாளொன்றுக்கு 90- கோடி வருமானம் வருகிறது என்பதர்காக மதுகடைகளை திறந்து தமிழ்நாட்டை சுடுகாடு ஆக்காதே. பல உயிர்களை காவுவாங்க காரணமாக உள்ள மதுகடைகளை மீண்டும் திறக்காதே.

வளமான தமிழகத்தை உருவாக்க
 அடித்தளம் அமையுங்கள். மக்கள் செழிப்புடன் வாழ திட்டங்கள் தீட்டுங்கள்.
மக்களுக்கு பயனற்ற கொள்கை முடிவில் முதன்மை வகிப்பது மதுகடைகள் தான் எனவே உடனடியாக தமிழகம் முழுவதும் மதுகடைகளை இழுத்து மூடுங்கள்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம் (மருத்துவ மனைகள்) மற்றும் அம்மா உணவகத்தை திறந்துவையுங்கள். மக்கள் வாழ்வை சீறழிக்கும் மாதுகடைகளை நிரந்தரமாக மூடுங்கள். இது எனது கோரிக்கை மட்டும் இல்லை தமிழகத்தில் உள்ள எட்டுகோடி பொதுமக்களின் முதன்மை கோரிக்கை.